ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்த ஸ்பெயின் தீர்மானம்

ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்த ஸ்பெயின் அரசு தீர்மானம்

by Staff Writer 13-04-2020 | 6:10 PM
Colombo (News 1st) ஊரடங்கு விதிமுறைகள் சிலவற்றை தளர்த்துவதற்கு ஸ்பெயின் தீர்மானித்துள்ளது. விதிமுறைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஸ்பெயினில் சில ஊழியர்கள் தொழிலுக்கு திரும்ப ஆயத்தமாகியுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 3 வாரங்களில் முதன்முறையாக தொற்றுக்குள்ளாகுவோரின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த சனிக்கிழமை முதல் இன்று வரை ஸ்பெயின் 619 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், 4167 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 60,000 இற்கும் அதிகமானோர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். ஸ்பெயினில் பல்பொருள் அங்காடிகள், பழக்கடைகள், வெதுப்பகங்கள், மருந்தகங்கள் மீள திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.