யாழ். தாவடி கிராமம் 21 நாட்களின் பின் இன்று விடுவிப்பு

யாழ். தாவடி கிராமம் 21 நாட்களின் பின் இன்று விடுவிப்பு

யாழ். தாவடி கிராமம் 21 நாட்களின் பின் இன்று விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Apr, 2020 | 5:48 pm

Colombo (News 1st) கடந்த 21 நாட்களாக முடக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் – தாவடி – ஜே 193 கிராம சேவகர் பிரிவு இன்று (13) விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ். தாவடி – ஜே 193 கிராம சேவகர் பிரிவில் கடந்த 24 ஆம் திகதி கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் சுமார் 255 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் குறித்த பகுதி முழுமையாக முடக்கப்பட்டது.

இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து வௌியேறுவதற்கும் வேறு பகுதி மக்கள் அங்கு நுழைவதற்கும் முற்றாக தடை விதிக்கப்பட்டிருந்ததுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த 21 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த தாவடி – ஜே 193 கிராம சேவகர் பிரிவு இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்