கொழும்புத் துறைமுகத்தில் பிலிப்பைன்ஸ் கடற்படை வீரர் – கொரோனா அச்சம்!

கொழும்புத் துறைமுகத்தில் பிலிப்பைன்ஸ் கடற்படை வீரர் – கொரோனா அச்சம்!

கொழும்புத் துறைமுகத்தில் பிலிப்பைன்ஸ் கடற்படை வீரர் – கொரோனா அச்சம்!

எழுத்தாளர் Staff Writer

13 Apr, 2020 | 7:15 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், வௌிநாட்டு கப்பலிலிருந்து கடற்படை வீரர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குறித்த கப்பலுக்கு சேவை வழங்கும் உள்நாட்டு நிறுவனமொன்று கொரோனா தொற்றை ஒழிக்கும் தேசிய மத்திய நிலையத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, குறித்த கடற்படை வீரர் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 36 வயதான கடற்படை வீரர் ஒருவருக்கே தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

துறைமுக வளாத்திற்குள் பூரண கிருமி ஒழிப்பிற்கு உட்படுத்தப்பட்ட அவர், சூரியவெவ அம்பியூலன்ஸ் வாகனத்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்