by Staff Writer 12-04-2020 | 2:59 PM
Colombo (News 1st) இன்று (12) முதல் எதிர்வரும் 4 நாட்களுக்கு மெனிங் சந்தையை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் எதிர்வரும் 16ஆம் திகதி வரை மெனிங் சந்தை முழுமையாக மூடப்படும் என மெனிங் சந்தை பொது வர்த்தகர் சங்கத்தின் உப தலைவர் நிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 105 லொறிகளில் மரக்கறிகள் மற்றும் பழங்கள் மெனிங் சந்தையை வந்தடைந்ததாக கூறியுள்ள மெனிங் சந்தை பொது வர்த்தகர் சங்கத்தின் உப தலைவர், அவற்றில் பெரும்பாலானவற்றை குறைந்த விலையில் நுகர்வோருக்கு விநியோகித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மீதமுள்ள மரக்கறிகள் மற்றும் பழங்கள் முழுவதும் இன்றைய தினத்திற்குள் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மெனிங் சந்தை பொது வர்த்தகர் சங்கத்தின் உப தலைவர் நிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.