வௌிநாடுகளிலிருந்து 14 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

வௌிநாடுகளிலிருந்து 14 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

வௌிநாடுகளிலிருந்து 14 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

12 Apr, 2020 | 2:51 pm

Colombo (News 1st) சர்வதேச விமான நிலையங்களில் சிக்குண்டிருந்த இலங்கையர்களில் 14 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

சிங்கப்பூர் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிலிருந்து இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்களில் 9 பேர் சிங்கப்பூரிலிருந்து வருகைதந்துள்ளதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஓமானிலிருந்த ஐவர் தோஹா கத்தாரினூடாக நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில் சர்வதேச விமான நிலையங்களில் சிக்குண்டிருந்த 33 பேரில் 17 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

ஏற்கனவே மூவர் மாலைதீவு மற்றும் துபாயிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளனர்.

ஏனைய 16 இலங்கையர்களையும் எதிர்வரும் நாட்களில் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே கூறியுள்ளார்.

இது குறித்து அந்தந்த நாடுகளின் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கொன்சியூலர் அலுவலகங்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு அழைத்துவரப்படுவோர் 21 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்