இன்சுலின் மருந்திற்கு தட்டுப்பாடு இல்லை - அமைச்சு

இன்சுலின் மருந்திற்கு தட்டுப்பாடு இல்லை - சுகாதார அமைச்சு

by Staff Writer 11-04-2020 | 5:43 PM
Colombo (News 1st) நீரிழிவு நோயாளர்களுக்கான இன்சுலின் மருந்திற்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் ஒரு தொகை இன்சுலின் மருந்து நாளை மறுதினம் (13) நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார். ஏனைய மருந்துகளையும் தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வாராந்தம் இன்சுலின் வகைகளை பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.