by Chandrasekaram Chandravadani 11-04-2020 | 10:18 PM
Colombo (News 1st) இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து அதனை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பாடசாலை செயற்பாடுகள் இடம்பெறாத காலப்பகுதியில் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வசதிகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக, கடந்த மார்ச் மாதம் 13 முதல் ஏப்ரல் 19 வரை முதலாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டதோடு, பாடசாலை இரண்டாம் தவணை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்க கல்வியமைச்சினால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.