திருகோணமலையில் 44 வயதான நபர் பொல்லால் தாக்கி கொலை

திருகோணமலையில் 44 வயதான நபர் பொல்லால் தாக்கி கொலை

by Staff Writer 10-04-2020 | 7:49 PM
Colombo (News 1st) திருகோணமலை - மொரவெவ, தன்குளம் G4 பிரதேசத்தில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 44 வயதான குறித்த நபர் பொல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் 59 வயதுடைய அவரது உறவுமுறைப் பெண் ஒருவரும் குறித்த பெண்ணின் 38 வயது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். குடும்பத் தகராறு கொலைக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இன்று காலை திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரி சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டார். மொரவெவ பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.