வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வை  Video Conference மூலம் நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வை  Video Conference மூலம் நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வை  Video Conference மூலம் நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

எழுத்தாளர் Bella Dalima

10 Apr, 2020 | 4:43 pm

Colombo (News 1st) பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வை Video Conference மூலம் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.

வீரர்கள் உடற்தகுதியுடன் இருப்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்தி வருகிறது. சர்வதேச அளவிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தேர்வில் தோல்வியடைந்தால், அணியில் இடமில்லை என்ற கொள்கையை முன்வைத்துள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் T20 தொடர் முடிந்த பின்னர் மார்ச் 23 ஆம் திகதி மற்றும் 24 ஆம் திகதிகளில் வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வை நடத்த இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டிகள் நிறுத்தப்பட்டு நகரங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் மைதானம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் 20 ஆம் திகதி மற்றும் 21 ஆம் திகதிகளில் Video Conference மூலம் வீரர்களிடம் உடற்பயிற்சி தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்