பொரளையில் பஸ்ஸூடன் அம்பியுலன்ஸ் மோதி விபத்து: எழுவர் காயம்

பொரளையில் பஸ்ஸூடன் அம்பியுலன்ஸ் மோதி விபத்து: எழுவர் காயம்

பொரளையில் பஸ்ஸூடன் அம்பியுலன்ஸ் மோதி விபத்து: எழுவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2020 | 3:56 pm

Colombo (News 1st) பொரளை – டி.எஸ்.சந்தி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் அம்பியுலன்ஸ் வாகனமொன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இரத்தினபுரியிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நோயாளிகளை ஏற்றிச்சென்ற அம்பியுலன்ஸூம் தேசிய வைத்தியசாலையிலிருந்து மாத்தறை நோக்கி தாதியர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸூம் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் அம்பியுலன்ஸிலிருந்த சிறு குழந்தையொன்று உள்ளிட்ட 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்