தொற்று அபாயம் நிலவும் மாவட்டங்களில் மருந்தகங்களை மூட நடவடிக்கை

தொற்று அபாயம் நிலவும் மாவட்டங்களில் மருந்தகங்களை மூட நடவடிக்கை

தொற்று அபாயம் நிலவும் மாவட்டங்களில் மருந்தகங்களை மூட நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2020 | 6:55 pm

Colombo (News 1st) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள அபாயம் நிலவும் மாவட்டங்களிலும் முழுமையாக கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுமுள்ள மருந்தகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

இதனடிப்படையில், ஏனைய மாவட்டங்களில் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை குறித்த மாவட்டங்களில் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளன.

இதனை தவிர, அபாயம் நிலவும் மாவட்டங்களில் மருந்துகளை இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்