கொரோனாவிற்கு விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்படும்

கொரோனாவிற்கு விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்படும் என நம்பும் ஜாக்கி சான்

by Bella Dalima 10-04-2020 | 4:31 PM
பிரபல ஹொலிவுட் நடிகர் ஜாக்கி சான் கொரோனாவிற்கு விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். அவர் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், ஜாக்கி சானின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு நன்றி தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது,
எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ரசிகர்கள் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனாவை குணப்படுத்தும் தடுப்பு மருந்து விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று நம்புகிறேன். இதுவே எனது பிறந்த நாள் விருப்பமும் ஆகும். உலக அமைதியும், நல்லிணக்கமும் ஏற்பட வேண்டுகிறேன். பாதுகாப்பாகவும், ஆரோக்கியத்தோடும் இருங்கள்.