அரிசி ஆலைகள் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

அரிசி ஆலை உரிமையாளர்களின் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

by Staff Writer 10-04-2020 | 3:44 PM
Colombo (News 1st) அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களின் சேவையும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களின் சேவையும் மறு அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய உணவு வழங்கல், நெல் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகம், உணவு பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக இவ்வாறு அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமது பிரதேசத்தில் கிடைக்கும் நெல் தொகையினை அரிசியாக மாற்றுமாறு நாட்டின் அனைத்து நெல் உற்பத்தி ஆலை உரிமையாளர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.