மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு தற்காலிகமாக சீல் வைப்பு

மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு தற்காலிகமாக சீல் வைப்பு

மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு தற்காலிகமாக சீல் வைப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Apr, 2020 | 6:51 pm

Colombo (News 1st) மத்திய மற்றும் தென் மாகாணங்களிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளன.

மதுபான விற்பனை நிலையங்களுக்கு அருகில் இடம்பெற்ற மோசடிகளைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்திலுள்ள 500 மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களத்தின் மத்திய மாகாண ஆணையாளர் உபுல் செனவிரத்ன குறிப்பிட்டார்.

இதேவேளை, தென் மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களத்தின் தென் மாகாண ஆணையாளர் சன்ன வீரக்கொடி கூறினார்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், இரவு நேரங்களில் சில மதுபான விற்பனை நிலையங்களில் மோசடிகள் இடம்பெறுவதாக கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாகாண ரீதியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கலால் வரித் திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்