தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 1 இலட்சம் பேருக்கு உணவு வழங்கும் ஹிருத்திக் ரோஷன்

தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 1 இலட்சம் பேருக்கு உணவு வழங்கும் ஹிருத்திக் ரோஷன்

தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 1 இலட்சம் பேருக்கு உணவு வழங்கும் ஹிருத்திக் ரோஷன்

எழுத்தாளர் Bella Dalima

09 Apr, 2020 | 4:34 pm

Colombo (News 1st) தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 1 இலட்சம் பேருக்கு உணவு வழங்க பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஏற்பாடு செய்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் கோடிக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றோர் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு உதவும் முயற்சியில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

நடிகர்-நடிகைகளும் தங்கள் வீடுகளை சுற்றி வசிக்கும் ஏழைகளுக்கு தேடிச்சென்று உணவு வழங்குகிறார்கள்.

இந்த நிலையில், பிரபல ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆதரவற்ற 1.2 இலட்சம் பேருக்கு அக்‌ஷய பாத்ரா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து உணவு வழங்க முன்வந்துள்ளார். இதற்காக அந்த தொண்டு நிறுவனம் ஹிருத்திக் ரோஷனுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

இதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள ஹிருத்திக் ரோஷன்,

நாட்டில் யாரும் பசியுடன் தூங்குகிறார்களா? என்பதை அறியும் சக்தி உங்களுக்கு கிடைக்க வேண்டும். களத்தில் இருக்கும் நீங்கள் தான் சூப்பர் ஹீரோக்கள். நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை தொடர்ந்து செய்வோம். யாருடைய பங்களிப்பும் சிறியதோ பெரியதோ அல்ல

என்று கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்