கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பில் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பரிந்துரை

கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பில் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பரிந்துரை

கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பில் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பரிந்துரை

எழுத்தாளர் Staff Writer

09 Apr, 2020 | 5:52 pm

Colombo (News 1st) போதைப்பொருள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பில் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவால் பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பதில் பொலிஸ் மா அதிபருக்கு இந்த பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பில் 5 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

13 ஆயிரத்திற்கும் அதிகமான விளக்கமறியல் கைதிகளில் 8000 பேர் வரை போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என சட்ட மா அதிபரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இவர்களுக்கு பிணை வழங்கும் முன்னர் தமது பரிந்துரைகளை பின்பற்றுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக விளக்கமறியல் சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியை கருத்திற்கொண்டு, விளக்கமறியல் கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பில் தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்