ஊரடங்கு சட்டத்தை மீறி வேறு மாவட்டங்களுக்கு செல்வோர் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்

ஊரடங்கு சட்டத்தை மீறி வேறு மாவட்டங்களுக்கு செல்வோர் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்

ஊரடங்கு சட்டத்தை மீறி வேறு மாவட்டங்களுக்கு செல்வோர் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்

எழுத்தாளர் Staff Writer

09 Apr, 2020 | 6:05 pm

Colombo (News 1st) ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வோர் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நாளை (10) முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும், அவ்வாறானவர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்ட 19 மாவட்டங்களிலும் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இதேவேளை, இந்த 19 மாவட்டங்களிலும் இன்று மாலை 4 மணி தொடக்கம் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்