அக்கரைப்பற்று 19 ஆம் பிரிவிற்குட்பட்ட பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

அக்கரைப்பற்று 19 ஆம் பிரிவிற்குட்பட்ட பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

09 Apr, 2020 | 7:44 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் நாட்டின் சில பகுதிகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன.

அம்பாறை – அக்கரைப்பற்று 19 ஆம் பிரிவிற்குட்பட்ட பகுதி இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

தொற்றுக்குள்ளானவர் அண்மையில் மரண சடங்கில் பங்குபற்றியிருந்தமையினால், அக்கரைப்பற்று 19 ஆம் பிரிவிற்குட்பட்ட 320 குடும்பங்களைச் சேர்தவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் – தாராபுரம் பகுதியில் உள்ள சில குடும்பங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – தாவடி கிராமம் முடக்கப்பட்டு இன்றுடன் 16 நாட்களாகின்றன.

எனினும், தாவடி கிராமம் முடக்கப்பட்டதிலிருந்து இதுவரை அங்கிருந்து எந்தவொரு கொரோனா தொற்றுக்குள்ளானவரும் அடையாளம் காணப்படவில்லை.

தாவடியின் J 193 கிராம பிரிவில் மார்ச் 24 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, சுமார் 350 குடும்பங்கள் வசித்துவரும் குறித்த பகுதி முடக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்