19 மாவட்டங்களில் நாளை ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது

19 மாவட்டங்களில் நாளை ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது

by Staff Writer 08-04-2020 | 3:25 PM
Colombo (News 1st) 19 மாவட்டங்களில் நாளை (09) காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களில் நாளை மாலை 04 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. 04 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி வ​ரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் அதே தினத்தில் மாலை 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அதி அபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை தவிர்ந்த வேறு விடயங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி வீதிகளில் நடமாடுவோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்படும் வாகனங்கள் தொற்று நிலைமை வழமைக்கு திரும்பும் வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்நிலையில், தமிழ் - சிங்கள வருடப்பிறப்பினை குடும்ப அங்கத்தவர்களுடன் மாத்திரம் கொண்டாடும் படி அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.