இலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபா 46 சதமாக வீழ்ச்சி

டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபா 46 சதமாக வீழ்ச்சி

by Staff Writer 08-04-2020 | 3:34 PM
Colombo (News 1st) அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கமைய, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 200 ரூபா 46 சதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.