by Staff Writer 08-04-2020 | 4:15 PM
Colombo (News 1st) அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை பகல் 01 மணி தொடக்கம் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 9 ,14 மற்றும் நவகம்புர உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் கொழும்பு 13 மற்றும் 15-இற்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.
நாளை பகல் 01 தொடக்கம் நாளை மறுதினம் வௌ்ளிக்கிழமை காலை 07 மணி வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.