கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2020 | 7:28 pm

Colombo (News 1st) இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் மேலும் 3 கொரானா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 189 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் 44 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 138 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இருமல், தடிமன் மற்றும் சுவாசப் பிரச்சினை காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறான நோய் குணங்குறிகள் காணப்படுமாயின் 1390 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு அறிவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்