ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இலங்கை தூதுவர்களுடன் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடல்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இலங்கை தூதுவர்களுடன் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2020 | 8:27 pm

Colombo (News 1st) பசில் ராஜபக்ஸ தலைமையில் இன்று நடைபெற்ற அத்தியாவசிய சேவை தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இலங்கை தூதுவர்கள் கலந்துகொண்டனர்.

ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக அவர்களது நாடுகளுக்கு அனுப்புவதற்காக அரசாங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையில் COVID-19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் குறித்து தூதுவர்கள் பாராட்டுத் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் பொருளாதாரத்துறை சார்ந்து எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜெர்மன், நெதர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ருமேனியா, சுவிட்ஸர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளின் தூதுவர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தூதுவரும் இதில் கலந்துகொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்