அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்

அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்

அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2020 | 10:04 am

Colombo (News 1st) நாளை (09) வியாழக்கிழமை காலை 09 மணி தொடக்கம் மாலை 05 மணி வரை நாடளாவிய ரீதியில் மருந்தகங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைக்கான ஜனாதிபதி செயலணியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரின் தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து ஆயுர்வேத மருந்தகங்களையும் இந்த காலப்பகுதியில் திறப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் ஒரு மருந்தகம் அல்லது நடமாடும் சேவைக்கு அனுமதி வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொத்தமல்லி, இஞ்சி, வெனிவேல் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கும் ஆயுர்வேத சிகிச்சைகளை பெறுவோருக்கு வீடுகளுக்கே மருந்துகளை அனுப்புவதற்கும் அத்தியாவசிய சேவைக்கான ஜனாதிபதி செயலணியின் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்