யாழில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை; பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

by Staff Writer 07-04-2020 | 7:16 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டார். கொரோனா பரிசோதனை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார். இதேவேளை, கிளினிக்கிற்கு வருகை தரும் நோயாளர்களை வைத்தியர்கள் பார்வையிடுவதில்லை எனவும் மருந்துகள் மட்டுமே வழங்கப்படுவதாகவும் நோயாளர்கள் விசனம் தெரிவித்தனர். நீண்ட தூரத்திலிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு வரும் தாம் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாகவும் நோயாளர்கள் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை மாத்திரம் வைத்தியசாலைக்கு வரும்படி கூறப்பட்டுள்ளதாகவும் ஏனையோருக்கு தொலைபேசியூடாக அறிவுரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். எனினும், பல இடங்களில் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், மருத்துவ நிபுணர்கள் - நோயாளர்கள் இடையில் தொடர்பை ஏற்படுத்தி மருந்துகளை வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்