by Staff Writer 07-04-2020 | 10:40 PM
Colombo (News 1st) நாட்டிற்காக வீடுகளில் இருந்து அர்ப்பணிப்பு செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்களுக்கு இன்றிரவு 7.45-க்கு ஆற்றிய விசேட உரையிலேயே பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அவதானம், அர்ப்பணிப்பு, ஒழுக்கம் என்பவற்றின் அடிப்படையிலேயே கொரோனா போன்ற பாரிய நோய்த்தொற்றில் இருந்து நாம் வாழ்வதா, சாவதா என்பது தீர்மானிக்கப்படும் என பிரதமர் கூறியுள்ளார்.
சமூகத்தை காப்பாற்றுவதற்காக அரச புலனாய்வுப் பிரிவினரை ஈடுபடுத்த ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
அரச நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளமையினால் அரச சேவையாளர்கள் 15 இலட்சம் பேர் தற்போது வீடுகளில் உள்ளதாகவும் பிரதமர் தனது விசேட உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.