காச நோய் தடுப்பூசி கொரோனாவை கட்டுப்படுத்துமா?

காச நோய் தடுப்பூசி கொரோனாவை கட்டுப்படுத்துமா?

by Staff Writer 07-04-2020 | 10:08 AM
காச நோயை குணப்படுத்துவதற்காக நூறு வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட PCG தடுப்பூசியை பயன்படுத்தி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியுமா என விஞ்ஞானிகள் தற்போது பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர். 1920 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தடுப்பூசி மூலம் COVID-19 வைரஸ் தாக்கத்தை குறைக்க முடியுமா என ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியாவில் COVID-19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் முக்கிய சுகாதார ஊழியர்கள் 4000 பேரை பயன்படுத்தி பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது. இதேவேளை, ஜெர்மனியில் வயது முதிர்ந்த நோயாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், நெதர்லாந்தின் சுகாதார பணியாளர்களை பயன்படுத்தி பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. சிறுவயதில்  PCG தடுப்பூசி ஏற்றப்படுகின்ற நாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதென்பது கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.