வவுனியாவில் ஆதரவற்றோருக்கு அடைக்கலம்

வவுனியாவில் ஆதரவற்றோருக்கு அடைக்கலம்

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2020 | 5:45 pm

Colombo (News 1st) வவுனியா நகர தெருவோரங்களில் தங்கியிருந்த ஆதரவற்ற சிலர் வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வீதியோரத்தில் பொழுது கழித்துப் பழகியோருக்கு ஊரடங்கு சட்ட உத்தரவு ஒரு பொருட்டல்ல. எனினும், ஊணுக்கும் உறையுளுக்குமான நாளாந்த போராட்டம் தற்போது உக்கிரமடைந்திருக்கிறது.

வவுனியா நகரில் மனித நடமாட்டம் அற்றுப்போக, நேசக்கரங்கள் நீளும் எனும் எதிர்பார்ப்பில் காத்திருந்த ஆதரவற்ற சிலர் இன்று கலாசார மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வவுனியா பிரதேச செயலாளரின் அனுமதியோடு சமூக ஆர்வலர்கள் சிலர் இணைந்து குடியிருப்பு கலாசார மண்டபத்திற்கு இவர்களை அழைத்துச் சென்றனர்.

முதற்கட்டமாக 8 பேர் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களையும் அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்