முல்லைத்தீவில் இராணுவத்தால் மானிய விலையில் மரக்கறி விற்பனை

முல்லைத்தீவில் இராணுவத்தால் மானிய விலையில் மரக்கறி விற்பனை

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2020 | 5:36 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றிலிருந்து நாட்டு மக்களை மீட்பதற்கான பணிகளை முப்படையினரும் பொலிஸாரும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஒத்துழைப்படு வழங்குவதிலும் அவர்கள் பின்நிற்கவில்லை.

முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்குத் தேவையான மரக்கறி வகைகளை மானிய விலையில் இராணுவத்தினர் வீடுகளுக்கே எடுத்துச் சென்று வழங்குவதை இன்று அவதானிக்க முடிந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, தண்ணீரூற்று, கணுக்கேணி, மாமூலை, நீராவிப்பிட்டி, கள்ளப்பாடு கரையோரக் கிராமப் பகுதிகளில் இராணுவத்தினரால் குறைந்த விலையில் மரக்கறி வகைகள் விற்பனை செய்யப்பட்டன.

59 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், மரக்கறி வகைகள் பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட பொதியில் கத்தரி, பூசணி, பயற்றை மற்றும் கறி மிளகாய் ஆகியன தலா 500 கிராம் வீதம் வைக்கப்பட்டிருந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்