அதிக விலையில் பொருட்கள் விற்பனை: நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு முறைப்பாடு

அதிக விலையில் பொருட்கள் விற்பனை: நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு முறைப்பாடு

அதிக விலையில் பொருட்கள் விற்பனை: நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2020 | 6:48 pm

Colombo (News 1st) அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க குறிப்பிட்டார்.

அத்தியாவசிய பொருட்கள், மரக்கறிகள், மீன் வகைகள், இறைச்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகள் குறித்து மாவட்ட ரீதியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க தெரிவித்தார்.

தொடர்ந்தும் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் பட்சத்தில் 1977 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்