கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் பாடகி கனிகா கபூர்

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் பாடகி கனிகா கபூர்

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் பாடகி கனிகா கபூர்

எழுத்தாளர் Bella Dalima

06 Apr, 2020 | 4:43 pm

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பாடகி கனிகா கபூர் தற்போது குணமாகியுள்ளார். இதனால் அவர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

பிரிட்டனிலிருந்து கடந்த 10 ஆம் திகதி மும்பை திரும்பிய கனிகா கபூா், பின்னர் உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவிற்கு சென்றுள்ளார்.

கடந்த 13, 14, 15 ஆகிய திகதிகளில் 3 விருந்து நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்த பா.ஜ.க MP துஷ்யந்த் சிங், அவரது தாயாரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே, உத்தரப் பிரதேச மாநில சுகாதார துறை அமைச்சா் ஜெய் பிரதாப் சிங் உள்ளிட்டோர் தம்மை தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

லக்னெளவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கனிகா கபூருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு தொற்று குணமானதால் வீடு திரும்பியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்