கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா: பமுனுகம பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா: பமுனுகம பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா: பமுனுகம பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2020 | 5:58 pm

Colombo (News 1st) ஜா- எல, பமுனுகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பமுனுகம – தெலபுர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதன் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சுகவீனமடைந்ததன் காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பமுனுகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 30 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பமுனுகம பொலிஸ் நிலையத்தில் கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்