இந்தியாவில் 4,067 பேருக்கு கொரோனா தொற்று: 109 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் 4,067 பேருக்கு கொரோனா தொற்று: 109 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் 4,067 பேருக்கு கொரோனா தொற்று: 109 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Apr, 2020 | 4:10 pm

Colombo (News 1st) இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,067 ஆக உயர்வடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நோக்கில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால், கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவிற்கு இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 292 ஆனது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 571 பேரும் டெல்லியில் 503 பேரும் கேரளாவில் 314 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்