ஊரடங்கு உத்தரவை மீறிய மேலும் ​1245 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய மேலும் ​1245 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய மேலும் ​1245 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2020 | 11:29 am

இன்று காலை 06 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் 336 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 13,468 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 3 353 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு , கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம், கண்டி ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களிலும் நாளை காலை 06 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்