நிர்க்கதியானவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு

நிர்க்கதியானவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு

நிர்க்கதியானவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

05 Apr, 2020 | 11:15 am

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து மேல் மாகாணத்தின் முக்கிய நகரங்களில் பல்வேறு தொழிற்துறைகளுக்காக தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளவர்களை மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு அனுப்புவதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இது குறித்து மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் Marshal of the Field ரொஷான் குணதிலக்க கூறினார்.

மீண்டும் வீடுகளுக்கு செல்வதற்கு வசதிகள் இன்மையால் இவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, உரிய நடைமுறையூடாக இவர்கள் விரைவில் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அது குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு ஆளுனர் அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்