இந்தியாவிற்கு யாத்திரை மேற்கொண்டு நாடு திரும்பிய 233 பேர் வீடு திரும்பினர்

இந்தியாவிற்கு யாத்திரை மேற்கொண்டு நாடு திரும்பிய 233 பேர் வீடு திரும்பினர்

இந்தியாவிற்கு யாத்திரை மேற்கொண்டு நாடு திரும்பிய 233 பேர் வீடு திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2020 | 8:36 pm

Colombo (News 1st) இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய யாழ். தென்மராட்சி – விடத்தற்பளை 522 படையணியின் தனிமைப்படுத்தல் முகாமில் கண்காணிக்கப்பட்ட 233 பேர் இன்று வீடு திரும்பினர்.

இந்தியாவிற்கு யாத்திரை மேற்கொண்டு நாடு திரும்பிய 157 பெண்களும் 76 ஆண்களும் இந்த தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

யாழ். குடாநாட்டில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட குழுவினர் வெளியேறிய முதற்சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த 22 ஆம் திகதியிலிருந்து இவர்கள் தனிமைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்