ஓய்வூதிய கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் விசாரணைகளை மேற்கொள்ள விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

ஓய்வூதிய கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் விசாரணைகளை மேற்கொள்ள விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

ஓய்வூதிய கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் விசாரணைகளை மேற்கொள்ள விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

04 Apr, 2020 | 3:14 pm

Colombo (News 1st) ஓய்வூதிய கொடுப்பனவு தபால் திணைக்களத்தினூடாக கிடைக்கப்பெறாதவர்கள், அது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1950 என்ற இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு அது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டார்.

சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகளை நேற்றும் (03), நேற்று முன் தினமும் (02) தபால் ஊழியர்கள் பகிர்ந்தளித்தனர்.

95 வீதமான கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் கூறியுள்ளார்.

வழங்கப்பட்டுள்ள முகவரியில் சிர் வசிக்காததன் காரணமாக அவர்களுக்கான ஓய்வூதியத்தை வழங்க முடியாதுள்ளது.

இதேவேளை, நேற்றும் நேற்று முன் தினமும் ஓய்வூதிய கொடுப்பனவை வங்கிகளூடாக பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

எதிர்வரும் 06 ஆம் திகதியும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்