by Staff Writer 04-04-2020 | 3:41 PM
Colombo (News 1st) இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1493 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் 360 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 12,223 பேர் மொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் மொத்தமாக 3017 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு , கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம், கண்டி ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய 19 மாவட்டங்களிலும் எதிர்வரும் 06 ஆம் திகதி காலை 06 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.