இலங்கையை முடக்குவதாக வெளியாகும் தகவல் பொய்யானது: வதந்திகளை பரப்புவோர் குறித்து CID விசாரணை

இலங்கையை முடக்குவதாக வெளியாகும் தகவல் பொய்யானது: வதந்திகளை பரப்புவோர் குறித்து CID விசாரணை

இலங்கையை முடக்குவதாக வெளியாகும் தகவல் பொய்யானது: வதந்திகளை பரப்புவோர் குறித்து CID விசாரணை

எழுத்தாளர் Staff Writer

04 Apr, 2020 | 8:27 pm

Colombo (News 1st) இலங்கையை முழுவதுமாக முடக்குவது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வௌியிடப்படும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களினூடாக பரப்பப்படும் இவ்வாறான வதந்திகளை நம்பி மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு வதந்திகளைப் பரப்புவோர் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவ்வாறானவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்