Covid-19 வைரஸ் ஒழிப்பு: உலக வங்கியால் சலுகைக் கடன்

Covid - 19 வைரஸ் ஒழிப்பிற்காக உலக வங்கியால் சலுகைக் கடன்

by Staff Writer 03-04-2020 | 2:44 PM
Colombo (News 1st) Covid-19 வைரஸ் ஒழிப்பிற்காக சலுகைக் கடனை நாட்டிற்கு வழங்க உலக வங்கியின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது. 128.6 மில்லியன் டொலர் சலுகைக் கடனை வழங்குவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை இல்லாதொழித்தல், வைரஸ் தொற்றைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை உள்ளிட்ட பொது சுகாதார சேவையை வலுப்படுத்துவதற்காக இந்த சலுகைக் கடன் வழங்கப்படவுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. அரசின் பிரதிபலிப்பு, ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்தல், வைத்தியசாலைகள், நோயாளர்களுக்கான சிகிச்சை, மருத்துவ குழாமிற்கான பயிற்சி உள்ளிட்ட விடயங்களுக்காக இந்த நிதியை பயன்படுத்த முடியும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச அபிவிருத்தி வங்கியிலிருந்து 35 மில்லியன் டொலர் நிதியும் உலக வங்கியின் அபிவிருத்தி சங்கத்தினூடாக 93.6 மில்லியன் டொலர் நிதியும் சலுகை கடனாக வழங்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.