நிர்ணய விலையில் பொருட்கள் விற்கப்படுவதில்லை – பெருந்தோட்ட மக்கள் குற்றச்சாட்டு

நிர்ணய விலையில் பொருட்கள் விற்கப்படுவதில்லை – பெருந்தோட்ட மக்கள் குற்றச்சாட்டு

நிர்ணய விலையில் பொருட்கள் விற்கப்படுவதில்லை – பெருந்தோட்ட மக்கள் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2020 | 8:20 pm

Colombo (News 1st) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், பெருந்தோட்டங்களில் நிர்ணய விலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.

அரசாங்கத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகை விலைக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை எனவும் பெருந்தோட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது காணப்படும் நிலையில் பெருந்தோட்டங்களில் உள்ள விற்பனை நிலையங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அவ்வாறான வர்த்தக நிலையங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் M.A.M. நவாஸ் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்