கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனையும் கடந்தது

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனையும் கடந்தது

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனையும் கடந்தது

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

03 Apr, 2020 | 4:38 pm

Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

உலகளாவிய ரீதியில் கொரோனா மரணங்கள் 53,000 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில், 960 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை அமெரிக்காவில் 6,062 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அமெரிக்காவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 224,4 320 ஆக பதிவாகியுள்ளது.

உலகளாவிய ரீதியில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகிய நாடாக அமெரிக்கா காணப்படுகின்றது.

அடுத்த இரண்டு வாரங்கள், நிர்ணயமிக காலப்பகுதியாக இருக்கும் என அமெரிக்கர்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்