கொரோனாவின் பிடியிலிருந்து பிரபஞ்சத்தை மீட்பதற்கான இறைவழிபாடு

கொரோனாவின் பிடியிலிருந்து பிரபஞ்சத்தை மீட்பதற்கான இறைவழிபாடு

கொரோனாவின் பிடியிலிருந்து பிரபஞ்சத்தை மீட்பதற்கான இறைவழிபாடு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

03 Apr, 2020 | 3:01 pm

Colombo (News 1st) கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து பிரபஞ்சத்தை மீட்பதற்கான இறைவழிபாடு இன்று (03) நாடளாவிய ரீதியிலுள்ள ஆலயங்களில் நடைபெற்றன.

MTV/MBC மற்றும் நியூஸ்பெஸ்ட் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு வழிபாடு கொழும்பு – கொச்சிக்கடை ஶ்ரீ ​பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றது.

இதேவேளை, நாடளாவிய ரீதியிலுள்ள கோயில்களிலும் இன்று காலை சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம், ருத்ர ஜெபம் என்பன நடைபெற்றன.

சமூக இடைவௌியை பேணும் வகையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளில் குறைந்த எண்ணிகையிலான அடியார்களே கலந்துகொண்டிருந்தனர்.

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம்
வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம்
நல்லூர் கந்தசுவாமி ஆலயம்
வவுனியா ஶ்ரீ கருமாரி அம்மன் ஆலயம்
உடப்பு ஶ்ரீ ருக்மனி, சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்த சாரதி, திரௌபதியம்மன் ஆலயம்
மாத்தளை அருள்மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்
பொகவந்தலாவை ஈழத்துப் பழனி ஶ்ரீ தண்டாபுதபானி சுவாமி ஆலயம்
கண்டி செல்வ விநாயகர் ஆலயம்
பொகவந்தலாவை செல்வகந்தை ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம் மற்றும்
பண்டாரவளை ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயங்களில் இன்று காலை சிறப்புப் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு,
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.

இதேவேளை, கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையின் தலைமையில் தேசத்தின் மீட்பிற்கான விசேட ஆராதனை இராகம தேவத்த தேசிய பெசிலிகா தேவாலயத்தில் இன்று இடம்பெற்றது.

அத்துடன், இன்று நாட்டின் அனைத்துப் பகுதியிலும் பள்ளிவாசல்களில் விசேட தூஆப் பிராத்தனைகளும் இடம்பெற்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்