கலேவெல பகுதியில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது

கலேவெல பகுதியில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது

கலேவெல பகுதியில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2020 | 5:43 pm

Colombo (News 1st) தம்புள்ளை – கலேவெல பகுதியில் பெண் ஒருவரிடமிருந்து 40 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஹெரோனின் பெறுமதி 5 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலேவெல பகுதியை சேர்ந்த 37 வயதான பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணை தம்புள்ளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்