சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு ஒத்திவைப்பு

சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு ஒத்திவைப்பு

by Staff Writer 02-04-2020 | 7:10 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணைகள் ஸ்கைப் (Skype) தொழில்நுட்பத்தினூடாக இடம்பெற்றது. நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், நீதிபதியின் ஆலோசனைக்கமைய Skype தொழில்நுட்பத்தினூடாக இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன. சிறைச்சாலை அத்தியட்சகரால் சிறைச்சாலையிலிருந்து வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. Skype தொழில்நுட்பத்தின் ஊடாக மட்டக்களப்பு குற்றவியல் சிவில் மேல் நீதிமன்ற நீதிபதி டி. சூசைதாசனினால் விசாரணைகள் இடம்பெற்றதுடன் வழக்கு எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.