பேருவளை பகுதியில் 49 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை

பேருவளை பகுதியில் 49 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை

பேருவளை பகுதியில் 49 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

01 Apr, 2020 | 6:04 pm

Colombo (News 1st) பேருவளை – பன்னில பகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் தொடர்புகொண்ட 49 பேரை கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட முதலாவது நோயாளியின் வீட்டுக்கருகில் வசிக்கும் நபர்களே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக வலதர மற்றும் மொரகல்ல பகுதிகளுக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் H.T. ஜயனக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த நோயாளியின் மனைவியின் வீடு அமைந்துள்ள பேருவளை பாரி ஹாஜியார் மாவத்தையில் அமைந்துள்ள வீட்டுக்கருகில் வசிப்பவர்களையும் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

அதேநேரம், வீடுகளை விட்டு வௌியேற வேண்டாம் என குறித்த பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்