கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டு தெரிவிப்பு

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டு தெரிவிப்பு

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டு தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Apr, 2020 | 2:32 pm

Colombo (News 1st) கொரேனா ஒழிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எதனம் கெப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொலைபேசி அழைப்பினூடாக தாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்ததாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Covid-19 வைரஸ் பரவலினால் ஆசிய பிராந்தியத்தின் பொருளாதாரம் மற்றும் சுகாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடியதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எதனம் கெப்ரியேசஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவரின் இந்த டுவிட்டர் பதிவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரிடுவீட் செய்துள்ளார்.

Covid-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் இலங்கையின் நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் நன்றி தெரிவித்ததாக குறிப்பிட்டு ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.

Covid-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்