Covid-19: விக்னேஸ்வரன் விடுத்துள்ள வேண்டுகோள்

Covid-19: சி.வி. விக்னேஸ்வரன் விடுத்துள்ள வேண்டுகோள்

by Staff Writer 30-03-2020 | 6:50 PM
Colombo (News 1st) கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் வணக்கஸ்தலங்களின் சமய சடங்குகளுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதியை வறிய குடும்பங்களுக்கு உதவுவதற்காகப் பயன்படுத்துமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொற்றின் நிமித்தம் நாளாந்த வருமானத்தில் குடும்பங்களைப் பராமரிக்கும் குடும்பத் தலைவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வீட்டைவிட்டு வௌியேற முடியாத சூழல் நிலவுவதுடன், பலருக்கு அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வருடாந்த திருவிழாக்கள், பூஜைகள், வழிபாடுகளுக்காக பயன்படுத்தப்படவிருந்த நிதி தேங்கிக்கிடக்கும் நிலையில், அதனை வறிய மக்களுக்கு உதவப் பயன்படுத்துமாறு சி.வி. விக்னேஸ்வரன் அறிக்கையினூடாக கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கிணங்க, வணக்கஸ்தலங்களின் நம்பிக்கை பொறுப்பாளர்கள் மற்றும் அறநிலை காப்பாளர்கள் ஒன்றிணைந்து வறிய மக்கள் ஓரிரு வாரங்களுக்கேனும் பயன்படுத்தக்கூடிய உலர் உணவுப்பொருட்களை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.