பழம்பெரும் நடிகை பரவை முனியம்மா இயற்கை எய்தினார்

பழம்பெரும் நடிகை பரவை முனியம்மா இயற்கை எய்தினார்

பழம்பெரும் நடிகை பரவை முனியம்மா இயற்கை எய்தினார்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

29 Mar, 2020 | 3:10 pm

பிரபல திரைப்பட நடிகையும் நாட்டுப்புறப் பாடகியுமான பரவை முனியம்மா இன்று (29) காலமானார்.

தூள், காதல் சடுகுடு மற்றும் மான் கராத்தே உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர்.

மேடை நிகழ்ச்சிகளில் பாடல் பாடி பார்வையாளர்கள் மனதைக் கொள்ளையடித்துவந்த பரவை முனியம்மா, ‘சிங்கம் போல’ என்ற பாடலைப் பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

கடந்த சில காலமாக சீரற்ற உடல்நிலையால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று இயற்கை எய்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்