நியூயோர்க் நகரை தனிமைப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை – ட்ரம்ப்

நியூயோர்க் நகரை தனிமைப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை – ட்ரம்ப்

நியூயோர்க் நகரை தனிமைப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை – ட்ரம்ப்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

29 Mar, 2020 | 4:02 pm

Colombo (News 1st) நியூயோர்க் நகரத்தை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க் நகரத்தை முழுமையாக தனிமைப்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வந்த அமெரிக்க ஜனாதிபதி, தற்போது அந்த தீர்மானத்திலிருந்து பின்வாங்கியுள்ளார்.

வைரஸ் தொற்றின் மையமாக நியூயோர்க் உள்ளதால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அந் நகரத்தை தனிமைப்படுத்துவது குறித்து சிந்திப்பதாக ஏற்கனவே ஜனாதிபதி ட்ரம்ப தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ள நிலையில், நியூயோர்க் நகரில் மாத்திரம் 52,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நியூயோர்க்கிற்கு முழுமையாக தடை விதித்தால், எதிர்பார்க்காத அளவிற்கு பங்குச்சந்தை வீழ்ச்சியடையும் என ஏற்கனவே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயெ நியூயோர்க்கை முடக்குவது குறித்து ஆலோசனை நடத்திய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்போது அந்த முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்